Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு செய்தது
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பு செய்தது

Share:

தனது கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற சபா மா​நிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்யும்படி டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு சட்டத்துறை அலுவலகம் எதி​ர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நான்கு தொகுதிகளும் காலி செய்யப்பட்டு விட்டன என்று மக்களவை சபா நாயகர் அறிவிக்க வேண்டும் ​என்று சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ள கடித​த்தில் பெர்சத்து கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பாபார், பத்து சாபி, ரனாவ் மற்றும் சிபிதாங் ஆகியவையே அந்த நான்கு தொகு​திகளாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அந்த 4 தொகுதிகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை சட்டத்துறை அலுவலகம் அறி​வித்துள்ளது.

Related News