Sep 8, 2026
Thisaigal NewsYouTube
சிறுமியைக் கடித்துக் குதறிய 5 வெறிநாய்களைப் பிடிக்க ஜோகூர் அரசாங்கம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

சிறுமியைக் கடித்துக் குதறிய 5 வெறிநாய்களைப் பிடிக்க ஜோகூர் அரசாங்கம் உத்தரவு

Share:

ஜோகூர் மாநிலம் பத்து பஹாட்டில் உள்ள கம்போங் தம்பாக் பகுதியில் கடந்த வார இறுதியில் 2 வயது சிறுமியைக் கடித்துக் குதறிய 5 வெறிநாய்களைப் பிடிக்க பெரிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்து பஹாட் மாவட்ட அலுவலகம், கால்நடை சேவைத்துறை மற்றும் போலீசாருடன் இணைந்து குறைந்தது ஒரு வாரத்திற்குத் தேடுதல் மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் என ஜோகூர் சமய விவகாரக் குழுத் தலைவர் முஹமட் ஃபாரெட் முஹமட் காலிட் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நாய் கூட்டத்தால் கடுமையாக தாக்கப்பட்ட நூர் ஹைரா வாஃபிகா முஹமட் ஹமிஸி என்ற 2 வயது சிறுமி, தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு, தற்போது சுல்தானா அமினா மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News