Sep 8, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

Share:

பினாங்கு துறைமுக எல்லைக்குள், சுல்தான் அப்துல் ஹாலிம் படகு முனையம் அருகே பயணிகள் படகும், ரசாயனக் கப்பலான எம்வி மெகார் ஜெயாவும் மோதிய சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பினாங்கு நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நடந்த இந்த மோதலில், படகில் பயணம் செய்த 21 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் மிகப் பெரிய விபத்தாக மாறியிருக்கக்கூடும் என பினாங்கு நுகர்வோர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பினாங்கு துறைமுகத்தின் முதல் படகு போக்குவரத்து நிர்வாக அமைப்பான விடிஎம்எஸ் (VTMS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முஹைதீன் தெரிவித்துள்ளார்.

பினாங்கு துறைமுக ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணையை பினாங்கு நுகர்வோர் சங்கம் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விடிஎம்எஸ் மூலம் ரேடார் மற்றும் தானியங்கி அடையாள அமைப்பின் உதவியுடன் கப்பல்களின் நகர்வுகளை கண்காணிக்க முடியும். எனவே, மோதலுக்கு முன்னர் இரு கப்பல்களுக்கும் ஏதேனும் எச்சரிக்கை அல்லது தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டதா என்பதை விசாரித்து, விசாரணை முடிவுகளை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

பேராக், கெடா, பினாங்கில் 14 கொள்ளை, கார் திருட்டு வழக்குகளில் கும்பல் கைது

பேராக், கெடா, பினாங்கில் 14 கொள்ளை, கார் திருட்டு வழக்குகளில் கும்பல் கைது

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

1700 ரிங்கிட் ஊதியமுள்ள ஒரு வேலை மலேசியர்களை ஈர்க்குமா? தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க முதலாளிகளுக்கு அமைச்சர் அப்துல் கானி அறிவுறுத்து

1700 ரிங்கிட் ஊதியமுள்ள ஒரு வேலை மலேசியர்களை ஈர்க்குமா? தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க முதலாளிகளுக்கு அமைச்சர் அப்துல் கானி அறிவுறுத்து

ஹோட்டல் அறையில் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹோட்டல் அறையில் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை