Sep 8, 2026
Thisaigal NewsYouTube
எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

Share:

எல்லைத் தாண்டி பரவும் புகைமூட்டப் பிரச்சினையை கையாளும் தற்போதைய ஆசியான் நடவடிக்கைகளில் மேம்பாடுகள் அவசியம் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

புகைமூட்டமானது பொதுமக்களின் ஆரோக்கியத்தை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை பாதிப்பதால், இந்த விவகாரத்தை ஆசியான் அமைச்சர்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில் அண்டை நாடுகளை தொடர்ந்து பாதிக்கும் புகைமூட்டப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள வட்டார நடவடிக்கைகள் போதுமான அளவு பயனாக உள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தோனேசியாவில் செயல்படும் மலேசிய நிறுவனங்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது உறுதியானால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மலேசியா அனுமதிக்கும் என்றும், அவர்களை நிச்சயமாக பாதுகாக்காது என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

Related News