Sep 8, 2026
Thisaigal NewsYouTube
கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு
தற்போதைய செய்திகள்

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

Share:

கோலா சிலாங்கூரில் உள்ள சுல்தான் சலாஹுடின் அப்தில் அஸிஸ் ஷா 5 பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டார்.

நேற்று இரவு 8.05 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, கோலா சிலாங்கூர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சுமார் 8.10 மணியளவில் அங்கு சென்ற அவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.

சுமார் 9.15 மணியளவில், தீயணைப்பு வீரர் ஒருவர் ஆற்றங்கரையில் இருந்து 50 மீட்டர் தூரம் நீந்திச் சென்று அந்த ஆடவரை மீட்டார்.

இந்நிலையில், அந்த ஆடவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சின் பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related News

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

1700 ரிங்கிட் ஊதியமுள்ள ஒரு வேலை மலேசியர்களை ஈர்க்குமா? தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க முதலாளிகளுக்கு அமைச்சர் அப்துல் கானி அறிவுறுத்து

1700 ரிங்கிட் ஊதியமுள்ள ஒரு வேலை மலேசியர்களை ஈர்க்குமா? தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க முதலாளிகளுக்கு அமைச்சர் அப்துல் கானி அறிவுறுத்து

ஹோட்டல் அறையில் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹோட்டல் அறையில் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை

அமைச்சரவை ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது – பிரதமர் அன்வார் நம்பிக்கை

அமைச்சரவை ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது – பிரதமர் அன்வார் நம்பிக்கை