Sep 8, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ
தற்போதைய செய்திகள்

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

Share:

ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில், சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் ஏற்பட்ட தீயை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அணைத்தனர்.

நேற்று இரவு 11.14 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 12 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

அதற்குள் மருத்துவமனை ஊழியர்கள் இரண்டு கார்பன் டை ஆக்சைடு தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைத்திருந்தனர்.

தீயில் கருவி சுமார் 15 சதவீதம் சேதமடைந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீ மீண்டும் பற்றிக் கொள்ளும் அபாயம் இல்லாததை உறுதி செய்ய, தீயணைப்பு வீரர்கள் அறையை காற்றோட்டப்படுத்தி, அப்பகுதியை கண்காணித்தனர். நள்ளிரவு 12.09 மணிக்கு மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.

Related News

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

1700 ரிங்கிட் ஊதியமுள்ள ஒரு வேலை மலேசியர்களை ஈர்க்குமா? தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க முதலாளிகளுக்கு அமைச்சர் அப்துல் கானி அறிவுறுத்து

1700 ரிங்கிட் ஊதியமுள்ள ஒரு வேலை மலேசியர்களை ஈர்க்குமா? தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க முதலாளிகளுக்கு அமைச்சர் அப்துல் கானி அறிவுறுத்து

ஹோட்டல் அறையில் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹோட்டல் அறையில் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை

அமைச்சரவை ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது – பிரதமர் அன்வார் நம்பிக்கை

அமைச்சரவை ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது – பிரதமர் அன்வார் நம்பிக்கை