ஜோகூர் பாருவில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை 6 ஆண்டுகள் 6 மாதங்களில் இருந்து, 12 ஆண்டுகளாக ஜோகூர் பாரு அப்பீல் நீதிமன்றம் உயர்த்தியுள்ளது.
உயர் நீதிமன்றம் குற்றத்தின் தீவிரத்தை போதிய அளவில் கருத்தில் கொள்ளாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் வயதுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாகக் கூறிய ஸைனி மஸ்லான், வோங் கியான் கியோங் மற்றும் எவ்ரோல் மரியெட் பீட்டர்ஸ் என்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி 19 வயதாக இருந்த ஷாய், உடலுறவு தொடர்பான தகராறின் போது கத்தியைப் பறிக்க நடந்த போராட்டத்தில் காதலனை மார்பில் பலமுறை குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் 28 காயங்கள் கண்டறியப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு பின்னர் மரணம் விளைவிக்கக் கூடிய குற்றம் என இவ்வழக்கானது மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.








