Sep 8, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் ஜெலுதோங் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

புக்கிட் ஜெலுதோங் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர் சடலம் மீட்பு

Share:

ஷா ஆலாம், புக்கிட் ஜெலுதோங், ஜாலான் பெர்சியாரான் பாலாய்ரோங் U8 அருகே புதர் மண்டிய பகுதியில் ஆடவர் ஒருவரின் அழுகிய நிலையில் இருந்த சடலத்தைப் போலீசார் நேற்று கண்டெடுத்தனர்.

நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சாமா தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால், உயிரிழந்தவரின் அடையாளத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆடவர் உயிரிழந்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அச்சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News