திரங்காணு மாநிலம் பண்டார் அல் முக்தாஃபி பில்லா ஷா அருகே உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நான்கு மாத பெண் குழந்தை, நேற்று உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று பிற்பகல் 3.41 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் அப்துல் ஹாலிம் நிக் மாட் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், குழந்தையை அவரது தாயார் காலை சுமார் 8 மணியளவில் நல்ல உடல்நிலையில் பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை சுமார் 10 மணியளவில், பால் கொடுத்து தூங்க வைத்த பின்னர், அக்குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை பராமரிப்பு மையத்தின் ஊழியர்கள் கண்டுள்ளனர்.
உடனடியாக குழந்தை டுரியான் மாஸ் சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் டுங்குன் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நிக் அப்துல் ஹாலிம் தெரிவித்துள்ளார்.








