Sep 8, 2026
Thisaigal NewsYouTube
29 கோழிகளுடன் சட்டவிரோத கடை சிக்கியது; ஜெலுத்தோங்கில் பினாங்கு மாநகராட்சி அதிரடி
தற்போதைய செய்திகள்

29 கோழிகளுடன் சட்டவிரோத கடை சிக்கியது; ஜெலுத்தோங்கில் பினாங்கு மாநகராட்சி அதிரடி

Share:

பினாங்கு, ஜெலுத்தோங்கில் ஜாலான் கோத்தா கியாம் பகுதியில் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் உரிமம் இல்லாத மளிகைக் கடை குடிசையை பினாங்கு தீவு மாநகராட்சி (MBPP) அதிரடியாக மூடி, இடித்து அகற்றியது.

கோழிகளின் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 29 உயிருள்ள கோழிகளும் ஒரு மின்னணு எடை கருவியும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவையான அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த அந்தக் குடிசை, உரிமம் இன்றியும் செயல்பட்டு வந்தது தெரியவந்ததுடன், சட்டவிரோத மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகளும் கண்டறியப்பட்டதாக பினாங்கு மாநகராட்சி தெரிவித்தது.

அந்த இடத்தைக் காலி செய்ய உரிமையாளருக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்காலிக ஆக்கிரமிப்பு உரிமத்திற்கான விண்ணப்பமும் கடந்த ஜூலை 14ஆம் தேதி நிராகரிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, உரிமையாளரின் முன்னிலையில் அந்தக் குடிசை இடித்து அகற்றப்பட்டது.

மேலும், 2022ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக பினாங்கு மாநகராட்சி மொத்தம் 703 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related News

டுங்குனில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

டுங்குனில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 4 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

பூலாய் ஜெயா தொழிற்பேட்டையில் 3 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: மூவர் கைது

பூலாய் ஜெயா தொழிற்பேட்டையில் 3 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: மூவர் கைது

புக்கிட் ஜெலுதோங் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர் சடலம் மீட்பு

புக்கிட் ஜெலுதோங் பகுதியில் அழுகிய நிலையில் ஆடவர் சடலம் மீட்பு

நேபாள பேரிடரில் மாயமான 55 மலேசியர்களை அடையாளம் காணும் முயற்சி: மரபணு மாதிரிகளுடன் நிபுணர்களை அனுப்புகிறது மலேசியா

நேபாள பேரிடரில் மாயமான 55 மலேசியர்களை அடையாளம் காணும் முயற்சி: மரபணு மாதிரிகளுடன் நிபுணர்களை அனுப்புகிறது மலேசியா

ஷா ஆலாமில் கும்பல்களுக்கிடையே மோதல் சம்பவங்கள்: 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலாமில் கும்பல்களுக்கிடையே மோதல் சம்பவங்கள்: 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: ட்ரோன் தொழில்நுட்பத்தில் மலேசியா–ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம்

கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: ட்ரோன் தொழில்நுட்பத்தில் மலேசியா–ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம்