Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: ட்ரோன் தொழில்நுட்பத்தில் மலேசியா–ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம்
தற்போதைய செய்திகள்

கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: ட்ரோன் தொழில்நுட்பத்தில் மலேசியா–ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம்

Share:

மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஆர்பிஏஎஸ் (RPAS) எனப்படும் தொலைவிலிருந்து இயக்கப்படும் விமான அமைப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள மலேசிய கடல்சார் அமலாக்க முகமையான எம்எம்இஏ (MMEA) தலைமையகத்தில் இன்று அதன் இயக்குநர் டத்தோ முஹமட் ரோஸ்லி அப்துல்லா மற்றும் ஆஸ்திரேலிய காலநிலை மாற்றம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத் துறையின் துணைச் செயலாளர் சீன் சுல்லிவன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் மலேசியாவின் பரந்த கடற்பரப்பில் கடல் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத் திறன்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் உள்ள அனுபவத்தையும், மலேசியாவின் கடல்சார் சூழல் மற்றும் அமலாக்கத் தேவைகள் குறித்த அறிவையும் ஒருங்கிணைத்து இந்த ஒத்துழைப்பு முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், RPAS தொழில்நுட்பத்தை MMEA-வின் நடவடிக்கைகளில் பாதுகாப்பான முறையில் ஒருங்கிணைத்து பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை வழங்குகிறது.

வான்வழி கண்காணிப்பு மூலம் கடற்பரப்பைக் கண்காணிக்கும் திறனை விரிவுபடுத்தி, தற்போதைய வளங்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த தொழில்நுட்பம் கூடுதல் ஆதரவாக இருக்கும் என முஹமட் ரோஸ்லி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Related News