ஈப்போ, பூலாய் ஜெயா தொழிற்பேட்டையில் 3 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான உயர்மதிப்பு உற்பத்திப் பொருட்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் மூன்று தொழிற்சாலை ஊழியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 28 முதல் 35 வயதுக்குட்பட்ட இரு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் நஜிப் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை கிடைத்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளனவா? என்பதையும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரின் பங்கையும் கண்டறியும் வகையில் குற்றவியல் சட்டம் பிரிவு 381-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








