Sep 8, 2026
Thisaigal NewsYouTube
பேராக், கெடா, பினாங்கில் 14 கொள்ளை, கார் திருட்டு வழக்குகளில் கும்பல் கைது
தற்போதைய செய்திகள்

பேராக், கெடா, பினாங்கில் 14 கொள்ளை, கார் திருட்டு வழக்குகளில் கும்பல் கைது

Share:

பேராக், கெடா மற்றும் பினாங்கில் கடந்த ஜூன் மாதம் முதல் 14 கொள்ளை மற்றும் கார் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் ‘கேங் மான் கூடா’ கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

24 முதல் 49 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் மற்றும் ஒரு பெண், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தைப்பிங் மற்றும் கூலிம் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஆறு திருடப்பட்ட கார்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்தக் கும்பலால் சுமார் 2 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கை மூலம் 9 கார் திருட்டு வழக்குகள், 2 கொள்ளை வழக்குகள், 3 வாகனங்களில் இருந்து பொருட்கள் திருடப்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கும்பலுடன் தொடர்புடைய மூன்று ஆண் சந்தேக நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Related News

கூட்டரசு அரசாங்கத்தின் 2025 நிதிநிலை அறிக்கையை மாமன்னர் பெற்றுக் கொண்டார்

கூட்டரசு அரசாங்கத்தின் 2025 நிதிநிலை அறிக்கையை மாமன்னர் பெற்றுக் கொண்டார்

முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டுகிறது சிலாங்கூர்: 100 பில்லியனைத் தாண்டும் என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நம்பிக்கை

முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டுகிறது சிலாங்கூர்: 100 பில்லியனைத் தாண்டும் என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நம்பிக்கை

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து