வடக்கு சரவாக்கின் மாருடி மாவட்டத்தின் உள்பகுதியில் உள்ள STOLport எனப்படும் குறுகிய ஓடுபாதை விமானத் தளம் அருகே, விமானி உட்பட 5 பேர் பயணம் செய்த BO-105 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
லோங் லெல்லாங் விமான ஓடுபாதையின் முடிவுப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மிரி விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் பறக்கும் மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் மருத்துவப் பணியாளர்களை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகின்றது.
மிரியில் இருந்து சுமார் 310 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோங் லெல்லாங் STOLport, தொலைதூர கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் கெலாபிட் மற்றும் பெனான் சமூகங்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
9M-LLF என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையமான சிஏஏஎம் (CAAM) உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 3.58 மணியளவில் விமானத் தகவல் சேவை மூலம் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிஏஏஎம் தெரிவித்துள்ளது.








