Jul 29, 2026
Thisaigal NewsYouTube
HSA மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசல் குறைக்கப்படும்.
தற்போதைய செய்திகள்

HSA மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசல் குறைக்கப்படும்.

Share:

பெத்தாலிப்க் ஜெயா,ஜன.19
ஜோகூர், சுல்தானா அமினா மருத்துவமனை (HSA) வின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பகுதிகளில் ஏற்படும் நெரிசலையும் காத்திருப்போரின் நேர அளவும் குறைக்கப்பட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்தப் பிரச்னை மிக விரைவில் தீர்க்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் Dr Dzulkefly நம்பிக்கை தெரிவித்தார்.

இரு நாட்களுக்கு முன்னர், மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை அந்த மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவின் பச்சை நிறப் பகுதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஒட்டி சில X வலைத்தளப் பயனர்கள் தங்களின் அதிருப்தியையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

வலைத்தள வாசிகள் குறிப்பிட்டது போல், அம்மருத்துவமனையில் ஏதும் நடக்காது என வாக்குறுதி அளித்த அமைச்சர் சுல்கிஃப்லி, நோயாளிகள் காத்திருக்கும் நேர அளவைக் குறைக்கும் சுகாதார அமைச்சின் வுயூகங்களில், இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்டார்.

ஆபத்தில்லாத வழக்கமான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இருந்தால் மட்டுமே பச்சை நிறப் பகுதி மீண்டும் முடுக்கி விடப்பட்டு காத்திருப்போரின் நேர அளவு குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் விளக்கினார்.

பச்சை நிறப் பகுதியானது, குறிப்பிட்ட நாளில் மதியம் 2.00 மணி முதல் 9.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாலை 5.00 மணிக்கே மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

HSA மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசல் குறைக்கப... | Thisaigal News