Sep 12, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகளைக் குறிவைக்கும் தெருநாய்கள் — அபாயப் பகுதிகளை உடனடியாக அடையாளம் காண சுஹாகாம் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

குழந்தைகளைக் குறிவைக்கும் தெருநாய்கள் — அபாயப் பகுதிகளை உடனடியாக அடையாளம் காண சுஹாகாம் வலியுறுத்தல்

Share:

நாடெங்கிலும் சிறார்களை தெருநாய்கள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க, “சிறார் பாதுகாப்பு சார்ந்த தெருநாய் அபாயப் பகுதிகளை” ஊராட்சி அமைப்புகள் வரைபடமிட வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமின் சிறார் ஆணையர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிகள், மழலையர் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், பிபிஆர் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்குச் செல்லும் பாதைகள் மற்றும் தெருநாய்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வரும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் கூட்டமாக சுற்றித்திரியும் ஆக்ரோஷமான நாய்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும், புகார்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் நடைமுறைகளை உருவாக்கவும், குழந்தைகள் மீது விலங்குகள் நடத்தும் தாக்குதல்கள் குறித்த தேசிய அளவிலான தரவுகளை மேம்படுத்தவும் சுஹாகாம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜோகூர் மாநிலம், சுங்கை கெலாம்புவில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி தனது பாட்டி வீட்டருகே 2 வயது சிறுமி 5 தெருநாய்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

விமான ஹெலிகாப்டர் விபத்து: 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு

விமான ஹெலிகாப்டர் விபத்து: 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு

தெமர்லோவில் கார் மோட்டார் சைக்கிள் விபத்து: 48 வயதான பரமசிவன் காசி உயிரிழந்தார்

தெமர்லோவில் கார் மோட்டார் சைக்கிள் விபத்து: 48 வயதான பரமசிவன் காசி உயிரிழந்தார்

குற்றவாளிகளைவிட வேகமாக செயல்பட வேண்டும் — கோலாலம்பூர் போலீசாருக்கு அதிரடி உத்தரவு

குற்றவாளிகளைவிட வேகமாக செயல்பட வேண்டும் — கோலாலம்பூர் போலீசாருக்கு அதிரடி உத்தரவு

ஜென் ஸீ (Gen Z) மொழியில் சாஹிட்டுக்குப் பதிலடி கொடுத்த 'குரு' அன்வார்

ஜென் ஸீ (Gen Z) மொழியில் சாஹிட்டுக்குப் பதிலடி கொடுத்த 'குரு' அன்வார்

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்