Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஜென் ஸீ (Gen Z) மொழியில் சாஹிட்டுக்குப் பதிலடி கொடுத்த 'குரு' அன்வார்
தற்போதைய செய்திகள்

ஜென் ஸீ (Gen Z) மொழியில் சாஹிட்டுக்குப் பதிலடி கொடுத்த 'குரு' அன்வார்

Share:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி இடையிலான வார்த்தைப் போர் தற்போது ஜென் ஸீ மொழி பாணியிலும் வெளிப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற அன்வார், தமது சமூக ஊடகப் பதிவில் தன்னை “குரு” என்றும், மற்றவர்களை “மாணவர்கள்” என்றும் குறிப்பிட்டு, “மடானி தூதரக உறவுகள்” எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறது என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்ளட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், அன்வார் தனது பதிவின் முடிவில் ‘ஸ்லேய்’ (Slayyy) என்ற ஜென் ஸீ வார்த்தையையும், நகத்தில் வர்ணம் பூசும் எமோஜியையும் பயன்படுத்தியுள்ளார்.

நகத்தில் வர்ணம் பூசும் எமோஜியானது, ஒரு துணிச்சலான கருத்தைச் சொல்லிவிட்டு, “மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை” என்ற மனநிலையை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இதே “குரு” என்ற வார்த்தையை நேற்று அம்னோ பொதுக்குழுவில் அன்வாரை விமர்சிக்கும் வகையில் ஸாஹிட் பயன்படுத்தியிருந்தார்.

“போதும் குருவே... எங்களது குரலையும் கேளுங்கள் குருவே. நீங்கள் செய்ததைவிட நாங்கள் சிறப்பாக செய்ய முடியும்” என்று மடானி எரிபொருள் மானியத் திட்டம் குறித்து ஸாஹிட் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

விமான ஹெலிகாப்டர் விபத்து: 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு

விமான ஹெலிகாப்டர் விபத்து: 5 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு

குழந்தைகளைக் குறிவைக்கும் தெருநாய்கள் — அபாயப் பகுதிகளை உடனடியாக அடையாளம் காண சுஹாகாம் வலியுறுத்தல்

குழந்தைகளைக் குறிவைக்கும் தெருநாய்கள் — அபாயப் பகுதிகளை உடனடியாக அடையாளம் காண சுஹாகாம் வலியுறுத்தல்

தெமர்லோவில் கார் மோட்டார் சைக்கிள் விபத்து: 48 வயதான பரமசிவன் காசி உயிரிழந்தார்

தெமர்லோவில் கார் மோட்டார் சைக்கிள் விபத்து: 48 வயதான பரமசிவன் காசி உயிரிழந்தார்

குற்றவாளிகளைவிட வேகமாக செயல்பட வேண்டும் — கோலாலம்பூர் போலீசாருக்கு அதிரடி உத்தரவு

குற்றவாளிகளைவிட வேகமாக செயல்பட வேண்டும் — கோலாலம்பூர் போலீசாருக்கு அதிரடி உத்தரவு

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

கிள்ளானில் நகை விநியோக ஊழியரிடம் 1.5 லட்சம் மதிப்புள்ள 70 தங்கக் கட்டிகள் கொள்ளை

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டார் பிரதமர் அன்வார்: கேரளா மற்றும் மாலத்தீவில் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்