சரவாக்கில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் மரபணுப் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
தேவையான ஆவணப் பணிகள் நிறைவடைந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என சரவாக் மாநில போலீஸ் தலைவர் ஸைனால் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உயிரிழந்த 5 பேரில் 3 பேருக்கான இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 3.40 மணியளவில், லாயாங்-லாயாங் ஏரோஸ்பெஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்ட BO-105 இரக ஹெலிகாப்டர், லோங் லெல்லாங் STOLport ஓடுபாதையின் இறுதிப் பகுதியில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.








