Jul 16, 2026
Thisaigal NewsYouTube
நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்
தற்போதைய செய்திகள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

ஜோகூரின் Forest Cityயில் செயல்படும் நெட்வொர்க் பள்ளி திட்டத்தில் தொடர்புடைய இஸ்ரேலியர்கள் மலேசியாவில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், இஸ்ரேலியர்கள் இதில் ஈடுபட்டிருப்பது உறுதியானால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், உயர்கல்வி அமைச்சர் இது குறித்து விரிவான விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இஸ்ரேலை மலேசியா அங்கீகரிக்காததால், இஸ்ரேலியர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று நேற்று ERM Foundation அமைப்பின் “A Celebration of Life and Peace” நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News