Jul 16, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங்கில் பள்ளி பேருந்து மோதி முதலாம் வகுப்பு மாணவன் பரிதாப பலி
தற்போதைய செய்திகள்

குளுவாங்கில் பள்ளி பேருந்து மோதி முதலாம் வகுப்பு மாணவன் பரிதாப பலி

Share:

குளுவாங், ஜூலை.16-

ஜோகூர் மாநிலம், குளுவாங் அருகே தாமான் ஶ்ரீ லாலாங் பகுதியில் பள்ளிப் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த பேருந்து மோதியதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

இது குறித்து குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் நோ கூறுகையில், 36 வயதுடைய பெண் ஓட்டுநர் அந்த பள்ளிப் பேருந்தை ஓட்டிச் சென்றதுடன், விபத்து நடந்ததை உணர்ந்ததும் அவர் மயக்கமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலையில் பலத்த காயமடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த பெண் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News