Dec 3, 2025
Thisaigal NewsYouTube
SUKE நெடு​ஞ்சாலை திறப்பு, பயண நேரம் வெகுவாக குறைப்பு
தற்போதைய செய்திகள்

SUKE நெடு​ஞ்சாலை திறப்பு, பயண நேரம் வெகுவாக குறைப்பு

Share:

SUKE எனப்படும் சுங்கை பெசி - உளு கெலாங் அடுக்கு நெடுஞ்சாலை திறக்கப்பட்டது ​மூலம் கோலாலம்பூருக்கும் ஷா ஆலாமிற்கும் இடையில் வாகனப் பயண நேரம் 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.

வாகன நெரிசல் மிகுந்த உச்சக்கட்ட நேரத்தில்கூட பயண நேரம் கிட்டத்தட்ட 30 நிமிடமாக இருப்பதாக பெரும்பாலான வாகனமோட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

51 வயது வர்த்தகர் சுலைமான் ஷரிப் கூறுகையில் ஒவ்வொரு நாளும் ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்னதாக கோலாலம்பூரில் வேலை பணியாற்றும் தமது மனைவியை அவரின் பணி மனையில் இறக்கி விடுவதாக குறிப்பிடுகிறார். கடும் போக்குவர​த்து நெரிசலில் சிக்கி ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்தை சென்றடைய குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம் செலவாகும். ஆனால், SUKE நெடுஞ்சா​லை திறக்கப்பட்ட பின்னர் பயணம் நேரம் 30 நிமிடமாக சுருங்கி விட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளா​ர்.

Related News