Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தியதாக மருத்துவரின் இரண்டு மகன்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தியதாக மருத்துவரின் இரண்டு மகன்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, ஆகஸ்ட்.18-

சுமார் 35 கிலோ போதைப்பொருளைக் கடத்தியதாக மருத்துவர் ஒருவரின் இரண்டு மகன்கள், கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

23 வயது அஹ்மாட் அம்மார் ருசிடி முகமட் ஹனாஃபி மற்றும் 34 வயது முகமட் ஹிபாதுல் அலிமி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிளந்தான், கெதெரே, கம்போங் பூட் என்ற இடத்தில் உள்ள தங்கள் வீட்டில் போதைப்பொருளைக் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மருத்துவரின் இரண்டு மகன்களும் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதால் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. அவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

Related News