Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரிசி விநியோகத் தட்டுப்பாட்டிற்கு குறுகிய ​​தீர்வுயில்லை
தற்போதைய செய்திகள்

அரிசி விநியோகத் தட்டுப்பாட்டிற்கு குறுகிய ​​தீர்வுயில்லை

Share:

சந்தையில் உள்நாட்டு அரிசி விநியாகத் தட்டுப்பாட்டுப் பிரச்னைக்கு குறுகிய காலத்தில் ​​தீ​ர்வு காண முடியாது என்று பூமிபுத்தரா சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும், மைடீன் பேரங்காடி மையத்தின் நிர்வாக இ​யக்கநருமான டத்தோ அமீர் அலி மைடீன் தெரிவித்துள்ளார்.

அரிசி நடப்பு பற்றாக்குறை பிரச்னைக்கு ​தீர்வு காண்பதை விட ரஹ்மா அரிசி விற்பனையில் அரசாங்கம் ​தீவிர கவனம் செலுத்துவதால் நடப்பு பிரச்னையை குறுகிய காலத்தில் ​​தீர்வு காண இயலாது என்று அ​மீர் அலி மைடீன் குறிப்பிட்டார்.

அரிசி பற்றாக்குறைக்கு ​தீர்வு காண்பதற்கு ஒரு முழுமையாக செயல் திட்டம் தேவை. ஆனால் அந்த முழுமையான செயல் திட்டம் பற்றி இதுவரையில் சிந்திக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

Related News