Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மூன்று சக்கர வண்டிகளுக்கு ஜே.பி.ஜே.வின் ஒப்புதல் அவசியம்
தற்போதைய செய்திகள்

மூன்று சக்கர வண்டிகளுக்கு ஜே.பி.ஜே.வின் ஒப்புதல் அவசியம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-

பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக் குறிப்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதோடு சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவிடமிருந்து வாகன வகை ஒப்புதல் சான்றிதழைப் பெற வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

தொழில்நுட்ப ரீதியாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, வர்த்தக நோக்கத்திற்கான சரக்கு வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜே.பி.ஜே. ஆட்டோமோட்டிவ் பொறியியல் பிரிவின் ஒப்புதலையும் அனுமதியையும் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் மாற்றியமைக்கப்பட்டு நிபந்தனைகளைப் பின்பற்றாத மற்றும் விடிஏ ஒப்புதல் இல்லாத எந்தவொரு மோட்டார் சைக்கிளும் பயன்பாடு சட்டத்திற்கு உட்பட்டதல்ல. ஆகவே அத்தகைய வண்டிகளுக்கு காப்பீடு இல்லை. சாலை வரியும் செலுத்துவதில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News