நாட்டில் வெங்காயத்தின் விநியோகமும் விலையும் இரண்டு மாதங்களில் சீராகிவிடும் என்று தெரியவந்துள்ளது.
தற்போது இந்தியாவில் அறுவடை காலம் என்பதால் வெங்காயத்தின் விநியோகத்தை அது அதிகரிப்பதுடன் வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை புதுடெல்லி குறைக்கலாம் என்று மைடின் hypermarket-டின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைடின் கூறினார்.
கடந்த மாதம் க்லேங் வெலேய் வணிக உரிமையாளர்கள் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளன என்று அளித்த புகாரை தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் வெங்காயத்தின் ஏற்றுமதி தடை நீக்கப்படுவதுடன் அதன் விலை குறையும் என்று நம்புவதாக அமீர் அறிவித்திருந்தார்.
சீனா, பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளில் இருந்து மலேசிய வெங்காயத்தை இறக்குமதி செய்திருந்தாலும் இந்தியாவின் ஏற்றுமதி தடையின் விளைவாக விலையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமீர் விளக்கினார்.








