Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால், ஈரான் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால், ஈரான் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயார்

கோலாலம்பூர், ஜூன்.24-

பாலஸ்தீனம் மற்றும் ஈரானின் இறையாண்மைக் கொண்ட பிரதேசங்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால், தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஈரான் தயாராக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் அண்மைய நிலவரங்கள் குறித்து பிரதமர் அன்வாருடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான், இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

"பாலஸ்தீனம் மற்றும் ஈரானின் இறையாண்மை கொண்ட பிரதேசங்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ஈரான் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அமைதியை வரவேற்கத் தயாராக உள்ளது என்பதை அதிபர் மசூத் உறுதி தெரிவித்துள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.

"இந்த நிலைப்பாட்டை மற்ற இஸ்லாமிய நாடுகளுக்குத் தெரிவிக்கும்படி அவர் தம்மை கேட்டுக் கொண்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

காஸா மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களைக் கண்டிப்பதில் மலேசியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →