Sep 27, 2026
Thisaigal NewsYouTube
நாளை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி: அரசாங்க  தலைமைச் செயலாளர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நாளை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி: அரசாங்க தலைமைச் செயலாளர் அறிவிப்பு

Share:

நாடு முழுவதும் உள்ள சுமார் 2 லட்சம் அரசாங்க ஊழியர்கள் நாளை ஏப்ரல் 15 ஆம் தேதி புதன்கிழஐம முதல் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான பொது சேவைத் துறையின் புத்தாக்கத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துப் பேசிய ஷம்சுல் , இந்த நடைமுறை அந்தந்த துறைத் தலைவர்களின் அனுமதி மற்றும் தகுதிக்கு உட்பட்டது என்றார்.

"வீட்டிலிருந்து பணிபுரிவதால் நிர்வாகத்தின் வேகம் குறையாது. ஊழியர்கள் ஓய்வெடுக்கவோ அல்லது சந்தைகளுக்குச் செல்லவோ இந்த நேரத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். திட்டமிடப்பட்ட பணிகள் எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தப்படக் கூடாது," என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதைய சூழலில் அரசுத் துறையில் புத்தாக்கம் என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயத் தேவை என்று குறிப்பிட்ட அவர், தரவு பகுப்பாய்வு மற்றும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related News