பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.10-
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவரது வழக்கறிஞர் அக்பெர்டின் அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அது போன்ற செய்திகள் போலியாகப் பரப்பப்படுகின்றன என்றும், குப்பைச் செய்திகள் என்றும் பதிலளித்துள்ளார்.
ஜாகிர் நாயக் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகவும், அவரைத் தான் காணும் போது, அவர் நல்ல உடல்நலத்துடன் தான் இருந்தார் என்றும் அக்பெர்டின் அப்துல் காடீர் குறிப்பிட்டுள்ளார்.








