பிந்துலு, செப்டம்பர்.01-
7 வயது சிறுவன் ஒருவன், நீர்த் தேக்கத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நேற்று பிந்துலு, ஜாலான் கெலஸ்டின், ஸ்பாயிட் சாலை சந்திப்பு அருகில் நிகழ்ந்தது. விளையாடச் சென்ற தனது மகனைக் காணவில்லை என்று இதற்கு முன்பு அந்தச் சிறுவனின் தந்தையிடமிருந்து தாங்கள் புகார் ஒன்றைப் பெற்றதாக பிந்துலு மாவட்ட போலீஸ் தலைவர் நிக்சன் ஜோஷுவா அலி தெரிவித்தார்.
சிறுவனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதில் சிறுவனின் வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நீர்த் தேக்கத்தில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








