அடுத்த ஆண்டு சனவரி தொடங்கி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் தங்கள் பணியைத் தொடங்க இருப்பதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
கல்விச் சேவை ஆணையத்தின் வாயிலாக தேவையான ஆசிரியர்களை கல்வி அமைச்சு பெற்றிருப்பதாகவும் தற்போதுள்ள ஆசிரியர்களுக்குப் பணிச் சுழ்மையை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய அமைச்சு எப்போதும் ஆக்ககராமன நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
குறிப்பாக, மலாய்மொழி, ஆங்கில மொழி, இசுலாமிய சமயக் கல்வி, வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி போன்ற பாடங்களுக்குப் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், அவ்வப்போது, தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.







