புதியதாக பிறந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஆண் சிசு ஒன்று, சிலாங்கூர், காஜாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7.07 மணியளவில் அந்த சிசு எவ்வித ஆடையுமின்றி கிடந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாயிட் ஹசான் தெரிவித்தார். அக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு 51 வயதுடைய ஆடவரால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த சிசு சிகிச்சைக்காக Serdang மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைப் பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக எசிபி முகமட் ஸாயிட் ஹசான்குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 318 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


