Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் முதலை தாக்கிய 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் முதலை தாக்கிய 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது

Share:

சரவாக் மாநிலம், பத்து காவா பகுதியிலுள்ள கம்போங் செகுபாங் அருகே சுங்கை சரவாக் ஆற்றில் தனது குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் முதலை தாக்கி உயிரிழந்தார்.

அவரது உடலானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் கண்டறியப்பட்டது.

தனது உடன் பிறந்தவர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, தனது கால் வலிப்பதாகக் கூறிய அச்சிறுவனை, சற்று நேரத்தில், முதலையொன்று இழுத்துச் சென்றதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், கண்டறியப்பட்ட அச்சிறுவனின் உடலில், இடது மற்றும் வலது கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News