Feb 25, 2026
Thisaigal NewsYouTube
"கார்ப்பரேட் மாஃபியா" புகார்கள்: எஸ்பிஆர்எம் மீதான விசாரணைக்கு அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் - கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

"கார்ப்பரேட் மாஃபியா" புகார்கள்: எஸ்பிஆர்எம் மீதான விசாரணைக்கு அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் - கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மீதான 'கார்ப்பரேட் மாஃபியா' குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜசெக சார்பில் அதன் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ முன்வைத்துள்ளார்.

ஓர் அமலாக்க அமைப்பு, தனக்கு எதிரான புகாரில் தானே நீதிபதியாகச் செயல்பட முடியாது என்பதால், எஸ்பிஆர்எம்மின் மறுப்பு மட்டும் போதாது என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை உள்ளடக்கிய இக்குற்றச்சாட்டுகள் அனைத்துலக கவனம் பெற்றுள்ளதால், வெளிப்படையான விசாரணை அவசியம் என கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார். சுயமான விளக்கங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்காது என்பதால், முறையான சட்ட அதிகாரங்களைக் கொண்ட அரச விசாரணை ஆணையம் மூலம் உண்மையை நிலைநாட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கை எஸ்பிஆர்எம்மின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வலுப்படுத்துவதற்காகவே எடுக்கப்படுகிறது. சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு அனைத்து விசாரணை அமைப்புகளும் செயல்படுவதை உறுதிச் செய்ய, விரைவில் இந்த அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே ஜசெக.வின் நிலைப்பாடாகும் என்று கோபிந்த் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News