கோலாலம்பூர், பிப்ரவரி.21-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மீதான பங்குரிமைப் புகார் தொடர்பாக, வாக்குமூலங்களைப் பதிவு செய்யச் சில தனிநபர்கள் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாகப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே விசாரணை கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பெர்னாமா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையின் இந்த நேரடித் தலையீடு விசாரணையில் வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்யும். மேலும், இந்தப் புகாரில் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கிய நபர்களின் பட்டியலைத் தயாரித்துள்ள போலீஸ் தரப்பு, விரைவில் அவர்களிடம் நேரிடையாக விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது என்று காலிட் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.








