ஷா ஆலாம், ஆகஸ்ட்.12-
ஆறு லட்சத்து 88 ஆயிரம் ரிங்கிட் தொடர்புடைய சட்டவிரோதப் பண மாற்றம் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பகுதி நேர திட்டமிடல் நிர்வாகி ஒருவர் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
46 வயது ஆர். விக்ரம் மேனன் என்று அந்த நிர்வாகி, நீதிபதி அவாங் கெரிஸ்நாடா அவாங் மாஹ்மூட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டேபார் 17 ஆம் தேதிக்கும், கடந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் டாமன்சாராவில் விக்ரம் மேனன் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
68 வங்கிகளில் 301 முறை பண பரிமாற்ற நடவடிக்கையின் வாயிலாக விக்ரம் மேனன், சட்டவிரோதப் பண மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அந்த நிர்வாகி தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் அவரை 70 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.








