Oct 16, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் நிதி அமைச்சர் டாயிமின், வெளிநாட்டு சொத்துக்கள் மீது பாய்ந்தது SPRM- மின் கழுகுப்பார்வை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் நிதி அமைச்சர் டாயிமின், வெளிநாட்டு சொத்துக்கள் மீது பாய்ந்தது SPRM- மின் கழுகுப்பார்வை

நவ.22-

கடந்த வாரம் காலமான முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஸைனுதீனுக்கு எதிரான நீதிமன்ற குற்றவியல் வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்ட போதிலும் வெளிநாட்டில் சொத்துக்களை குவித்து வைத்திருப்பதாக கூறப்படும் அந்த முன்னாள் நிதி அமைச்சரின் சொத்துகள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கழுகுப்பார்வை பாய்ந்துள்ளது.

வெளிநாட்டில் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் துன் டாயிம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் உள்ள சொத்துக்கள் மீதான SPRM விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக துன் டாயிமின் 67 வயது மனைவி Toh Puan Naimah மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள சொத்து விபரங்களை SPRM மிக துல்லியாக ஆராய்ந்து வருகிறது.

பிரமுகர்களின் வெளிநாட்டு சொத்து விவரங்களை அம்பலப்படுத்திய Pandora Papers புலனாய்வை அடிப்படையாக கொண்டு, மலேசியாவிற்கு வெளியே உள்ள துன் டாயிமின் சொத்து விவரங்களை SPRM துப்புத்துலக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் பல மாநிலங்களில் உள்ள தனது சொத்து விபரங்களை அறிவிக்கத் தவறியதற்காக 86 வயது துன் டாயிம் கடந்த ஜனவரி மாதம் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →