ஆகஸ்ட் 1 முதல் நேற்று அக்டோபர் 30 வரை மைஜாலான் செயலியின் மூலம் மொத்தம் மூவாயிரத்து 750 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், அறிவிப்புப் பலகைகள் சேதம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அவற்றில் அடங்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸான்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
மொத்த புகார்களில், 1,004 புகார்கள் அல்லது 26.77 விழுக்காடு பொதுப்பணித்துறை அமைச்சின் கீழ் இருக்கும் சாலைகள் குறித்தவை. என்றும் மீதமுள்ள 2,746 புகார்கள் அல்லது 73.23 விழுக்காடு மாநிலம், உள்ளாட்சி சாலைகள் சம்பந்தப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
பெலான் இன்டுக் தெக்னோலோஜி ஹிஜாவ் ஜிதிஎம்பி, ரங்கா தின்டாக்கான் மொபிலிட்டி ரென்டா கார்போன் 2021 - 2023 எல்சிஎம்பி மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மக்காக, மொத்தம் 22 மின்சார வாகனங்கள் மின்னூட்ட நிலையங்கள் டிசிஃப்சி பிளஸ் வடக்கு த்ற்கு நெடுஞ்சாலையில் இயங்கிக் கொண்டிருப்பதாக நெடுஞ்சாலைகளில் இயங்கி வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.
மேலும் 18 நிலையங்கள் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளதாக குறிப்பிடும் அமைச்சர், 119 மோட்டார் சைக்கிள் நிழலிடங்கள் கட்டப்படும் நிலையில் அவற்றில் 40 இவ்வாண்டு கட்டி முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.








