அலோர் ஸ்டார், செப்டம்பர்.28-
லங்காவி, பந்தாய் தெங்கா கடல் பகுதியில் பாராசெய்லிங் ப் படகுச் சாகசத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்! இன்று நண்பகல் 1.15 மணியளவில் பலத்த காற்று காரணமாக இந்தப் படகு கவிழ்ந்ததாக லங்காவி காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் சம்சுல்முடின் சுலைமான் தெரிவித்துள்ளார். படகில் ஒரு குழந்தை உட்பட 6 சுற்றுலாப் பயணிகளும் 2 பணியாளர்களும் இருந்தனர். விபத்தின் போது பாராசெய்லிங் செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். உடனடியாகச் சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்களுக்கு சுல்தானா மலிஹா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.








