Sep 7, 2026
Thisaigal NewsYouTube
தென் தாய்லாந்து தாக்குதல்கள் எதிரொலி — மலேசிய எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
தற்போதைய செய்திகள்

தென் தாய்லாந்து தாக்குதல்கள் எதிரொலி — மலேசிய எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

Share:

தென் தாய்லாந்தின் யாலா, பட்டாணி மற்றும் நராதிவாட் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, மலேசியா–தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

எல்லை வேலிகள், சுங்கை கோலோக் மற்றும் ஊடுருவலுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய வழித்தடங்களில் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது மலேசிய எல்லை நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தாக்குதல்களில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தேவையற்ற பயணங்களை தென் தாய்லாந்துக்கு தற்காலிகமாக ஒத்திவைத்து, அங்கு பயணிக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து