Sep 6, 2026
Thisaigal NewsYouTube
பட்ஜெட் ஹோட்டல்கள் விபசார மையங்களாக மாற்றம் — சிரம்பானில் 57 பேர் சிக்கினர்
தற்போதைய செய்திகள்

பட்ஜெட் ஹோட்டல்கள் விபசார மையங்களாக மாற்றம் — சிரம்பானில் 57 பேர் சிக்கினர்

Share:

சிரம்பானைச் சுற்றியுள்ள மூன்று இடங்களில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடி சோதனையில், விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 26 இந்தோனேசியப் பெண்கள், 5 வங்காளதேசப் பெண்கள் மற்றும் ஒரு இந்தியப் பெண் உட்பட மொத்தம் 32 வெளிநாட்டுப் பெண்களும் உள்ளனர்.

மேலும், ஏழு உள்ளூர் ஆண்கள் மற்றும் இந்தோனேசியா, வங்காளதேசம், மியான்மார் நாடுகளைச் சேர்ந்த ஆண்களும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸக்கரியா ஷாபான் தெரிவித்தார்.

தினசரி அல்லது வார, மாத அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டுப் பெண்கள் தங்க வைக்கப்பட்டு, பாலியல் சேவைகள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு சேவைக்கு 50 ரிங்கிட் வசூலிக்கப்பட்ட இந்த நடவடிக்கை சுமார் ஓராண்டாக நடைபெற்று, ஆண்டுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் வரை லாபம் ஈட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து