Sep 7, 2026
Thisaigal NewsYouTube
தேசிய தின வான்வெளி கட்டுப்பாடு — மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நேரங்களில் மாற்றம்
தற்போதைய செய்திகள்

தேசிய தின வான்வெளி கட்டுப்பாடு — மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நேரங்களில் மாற்றம்

Share:

நாட்டின் 69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி நடைபெறும் விமான அணிவகுப்பு மற்றும் ஒத்திகைகளுக்காக வான்வெளி தற்காலிகமாக மூடப்படுவதால், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், முதல் முனையத்தில் மலேசியன் ஏர்லைன்ஸின் சில விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 26 முதல் 28 வரை காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், ஆகஸ்ட் 29 மற்றும் 31 ஆகிய நாட்களில் காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரையும் வான்வெளி தற்காலிகமாக மூடப்படும்.

பாதிக்கப்படும் பயணிகளுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட தொடர்பு விவரங்கள் மூலம் அறிவிக்கப்படும் என மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 6 வரையிலான பள்ளி விடுமுறை மற்றும் பயண நெரிசலை கருத்தில் கொண்டு, கே.எல்.ஐ.எ முதல் முனையத்தில் இருந்து புறப்படும் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து