Sep 15, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Share:

கெப்போங்கில் பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

58 வயதான ஆங் கம் தோங் என்ற அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், 62 வயது கான் சியூ டீன் என்ற பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் அவர் படுகாயமடைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை, கெப்போங் தாமான் புசாட் பகுதியில் உள்ள ஒரு நம்பர் கடையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்றாம் நிலை தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், கைது செய்யும்போது தப்பிச் செல்ல முயன்றதால் பிணை வழங்கக்கூடாது என அரசுத் தரப்பு வாதிட்டது. இருப்பினும், 15,000 ரிங்கிட் பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

வழக்கு செப்டம்பர் 25ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்