Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி விடுமுறை, தேசிய தினம்: கூடுதல் கே.டி.எம்  கொம்யூட்டர்  ரயில் சேவை
தற்போதைய செய்திகள்

பள்ளி விடுமுறை, தேசிய தினம்: கூடுதல் கே.டி.எம் கொம்யூட்டர் ரயில் சேவை

Share:

பள்ளி விடுமுறை மற்றும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கே.டி.எம்.பி, வடக்கு பகுதிக்கான வழித்தடத்திற்கு எட்டு கூடுதல் கே.டி.எம் கொம்யூட்டர் ரயில் சேவைகளை இயக்குகிறது.

பட்டர்வொர்த்–பாடாங் பெசார்–பட்டர்வொர்த் வழித்தடத்தில், ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரை இந்தச் சிறப்பு சேவை அமலில் இருக்கும்.

இதன் மூலம், தினசரி ரயில் சேவைகளின் எண்ணிக்கை 38-லிருந்து 46 ஆக அதிகரிக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட 30 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் கூடுதலாக 5,000 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் இந்தச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில் மொத்தம் 25,000 கூடுதல் பயணிகளுக்கு வசதி கிடைக்கும் என கே.டி.எம்.பி தெரிவித்துள்ளது.

பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்கும் இந்தச் சேவை, விடுமுறைக் கால நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கே.டி.எம்.பி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி