Sep 7, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா–பாகிஸ்தான் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய முயற்சி
தற்போதைய செய்திகள்

மலேசியா–பாகிஸ்தான் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய முயற்சி

Share:

பாகிஸ்தானுக்கான தனது அதிகாரப்பூர்வ பணிப் பயணத்தின் நிறைவாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி-யை இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.

பாதுகாப்பு, போலீஸ் துறை ஒத்துழைப்பு, எல்லை நிர்வாகம் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சைஃபுடின் விளக்கினார்.

எதிர்கால ஒத்துழைப்புக்கு அடித்தளமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான விமானத் தொடர்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக சைஃபுடின் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து