Sep 15, 2026
Thisaigal NewsYouTube
இந்திரா காந்திக்கு மீண்டும் நீதிமன்றத்தில் பின்னடைவு
தற்போதைய செய்திகள்

இந்திரா காந்திக்கு மீண்டும் நீதிமன்றத்தில் பின்னடைவு

Share:

காணாமல் போன தனது மகள் பிரசன்னா டிக்ஸாவை மீட்டுத் தரத் தவறியதாக முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி தொடுத்திருந்த வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை ஒருமனதாக தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் கணவர் கே. பத்மநாதன் என்ற ரிடுவான் அப்துல்லா, 2008ஆம் ஆண்டு மகளை அழைத்துச் சென்ற சம்பவமே இந்திராகாந்தியின் பெரும் துயரத்திற்குக் காரணம் என நீதிமன்றம் தெரிவித்தது.

போலீசாரின் நடவடிக்கை மற்றும் தனது இழப்பு, துயரத்திற்கிடையிலான நேரடி காரணத் தொடர்பை இந்திரா நிரூபிக்கத் தவறிவிட்டதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்தது.

எனினும், இந்தத் தீர்ப்பு போலீசாருக்கு பொதுவான சட்டப் பாதுகாப்பை வழங்குவதில்லை என்றும், குழந்தையை மீட்பதற்கான அவர்களின் சட்டக் கடமையை குறைப்பதில்லை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

தீர்ப்புக்குப் பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமது வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்பதாக இந்திரா காந்தி தெரிவித்தார்

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

இந்திரா காந்திக்கு மீண்டும் நீதிமன்றத்தில் பின்னடைவு | Thisaigal News