Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சிகாமட் மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு
தற்போதைய செய்திகள்

சிகாமட் மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு

Share:

தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சரும், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ், தாம் ஏற்பாடு செய்த மானிய விலை சமையல் எரிவாயு விற்பனைத் திட்டத்தின் எட்டாவது கட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஜெமெந்தா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இத்திட்டத்தில், சிகாமட் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்காக 14 கிலோ எடையுடைய 1,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு சிலிண்டரும் வெறும் 10 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள 16 ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை தாம் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

ஜெமெந்தா மட்டுமின்றி, பண்டார் சிகாமட், பத்து அனாம், புலோ காசாப் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

காலியான சிலிண்டர்களை ஒப்படைத்து புதிய சிலிண்டர்களைப் பெறும் நடைமுறை வாகனங்களின் வழியே முறையாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் திட்டம் தொடர்ந்து மக்களின் சமையலறைச் செலவைக் குறைக்க உதவும் என்றும் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து