Aug 24, 2026
Thisaigal NewsYouTube
 ஃபட்லினா சிடேக் உட்பட 1,328 பேருக்கு மலாக்கா விருதுகள்
தற்போதைய செய்திகள்

ஃபட்லினா சிடேக் உட்பட 1,328 பேருக்கு மலாக்கா விருதுகள்

Share:

மலாக்கா மாநில ஆளுநர் துன் அலி ருஸ்தாமின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மொத்தம் 1,328 பேருக்கு மாநில விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், டார்ஜா கெமிலாங் செரி மலாக்கா என்ற அந்தஸ்திலான, டத்தோ ஸ்ரீ விருதைப் பெற்றார்.

மலாயா தலைமை நீதிபதி ஹாஷிம் ஹம்சா, போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் மற்றும் எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் ஆகியோரும் இதே விருதைப் பெற்றனர்.

இதில், 56 பேருக்கு டத்தோ வீரா விருதும், 14 பேருக்கு டார்ஜா மூலியா செரி மலாக்கா எனும் டத்தோ விருதும், மேலும் 189 பேருக்கு டார்ஜா பங்குவான் செரி மலாக்கா எனும் டத்தோ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

பல்வேறு பிரிவுகளில் சமூக சேவை மற்றும் நீண்டகால சேவையைப் பாராட்டும் பதக்கங்களும் நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டன.

Related News