Aug 24, 2026
Thisaigal NewsYouTube
கின்னஸ் பியருக்கு சிறந்த சேவை: மலேசியாவின் முதல் 30 பார்களுக்கு அங்கீகாரம்
தற்போதைய செய்திகள்

கின்னஸ் பியருக்கு சிறந்த சேவை: மலேசியாவின் முதல் 30 பார்களுக்கு அங்கீகாரம்

Share:

தரமான கின்னஸ் டிராப்ட் பியரை தொடர்ந்து சிறப்பாக வழங்கிய மலேசியாவின் 30 பார்கள் மற்றும் உணவகங்களுக்கு, Guinness Top 30 Perfect Pint Bars 2026 என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரேட் யுவர் பைண்ட் பிரசாரத்தின் மூலம் இந்தத் தேர்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கின்னஸ் பியரின் தரத்தை மதிப்பிட்டு, அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் 677 பங்கேற்பு நிலையங்களில், 3,480 வாடிக்கையாளர்களிடமிருந்து 7,000-க்கும் மேற்பட்ட மதிப்பீடுகள் பெறப்பட்டன. வாடிக்கையாளர்களின் மதிப்பீடு மற்றும் கின்னஸ் தர ஆய்வுக் குழுவின் தரச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்தப் பட்டியலில் கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர், பேராக், சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, ஹைனிகன் மலேசியா நிறுவனத்தின் பயிற்சித் திட்டத்தின் கீழ், 12 கின்னஸ் பயிற்றுவிப்பாளர்கள் நாடு முழுவதும் 406 நிலையங்களைச் சேர்ந்த 1,696 பார்டெண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கியுள்ளனர்.

கின்னஸ் பியரை தரமாக வழங்குவதில் உள்ள திறமை மற்றும் கவனத்தை அங்கீகரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Related News