Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தேசிய தினக் கொண்டாட்டத்தில் ஜோகூர் அரச படை அறிமுகம்: புத்ராஜெயாவில் புதிய கவர்ச்சி
தற்போதைய செய்திகள்

தேசிய தினக் கொண்டாட்டத்தில் ஜோகூர் அரச படை அறிமுகம்: புத்ராஜெயாவில் புதிய கவர்ச்சி

Share:

வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டத்தில், ஜோகூர் மாநிலத்தின் எனும் ஜே.எம்.எஃப் துணை இராணுவப் படை முதல் முறையாக பங்கேற்கிறது.

இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இது அமையும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

100 வீரர்களையும் படை உபகரணங்களையும் கொண்ட ஜே.எம்.எஃப் அணிவகுப்பு, இந்த ஆண்டின் கொண்டாட்டத்திற்கு புதிய வண்ணம் சேர்க்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், கடந்த ஆண்டுகளைப் போல ராணுவ மற்றும் போலீஸ் வாகனங்கள் அணிவகுப்பு பாதையோரத்தில் நிலையாக காட்சிப்படுத்தப்படாது. மாறாக, பொதுமக்கள் அருகில் சென்று பார்வையிடும் வகையில், அவை புத்ராஜெயாவில் உள்ள மொனுமென் ஆலஃப் பாரு பகுதியில் அமைக்கப்படும்.

இதனிடையே, தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது 70 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

அதேவேளையில், மனித கிராஃபிக் நிகழ்ச்சிக்காக சிலாங்கூரைச் சேர்ந்த 36 பள்ளிகளின் 1,500 மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங்- குடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை