Sep 12, 2026
Thisaigal NewsYouTube
என் மகள் பகடிவதை செய்யப்பட்டதை அறிவேன்; நீதிதான் வேண்டும்” — தாயார் கதறல்
தற்போதைய செய்திகள்

என் மகள் பகடிவதை செய்யப்பட்டதை அறிவேன்; நீதிதான் வேண்டும்” — தாயார் கதறல்

Share:

14 வயது மாணவி ஜி. கெசியா நிஷா உயிரிழந்த சம்பவத்தில், தனது மகள் பள்ளியில் பகடிவதை செய்யப்பட்டதைத அறிந்திருந்ததாகவும், தற்போது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தனது ஒரே கோரிக்கை என்றும் தாயார் கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தாயாரின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கித் தரப் போவதாக கெசியா கூறியிருந்தார். அந்தப் பரிசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியதை நினைவுகூர்ந்த கஸ்தூரி, அது தனது மகள் விட்டுச் சென்ற கடைசி நினைவுகளில் ஒன்றாக மாறிவிட்டதாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.

நடிகையாகி பிரபலமாக வேண்டும் என்ற கனவும் மகளுக்கு இருந்ததாக அவர் கூறினார். ஆனால், இப்படிப்பட்ட துயரமான முறையில் தனது மகளின் பெயர் அனைவராலும் அறியப்படும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

தனது மகள் அனுபவித்த மன அழுத்தம் மற்றும் பகடிவதை குறித்து தாயார்–மகள் இடையிலான உரையாடல்களின் மூலம் அறிந்திருந்ததாகவும் கஸ்தூரி கூறினார்.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 92 சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பகடிவதை குற்றம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 507B பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோக் ஃபடில் மர்சூஸ் தெரிவித்துள்ளார்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்